10.5% உள் இடஒதுக்கீடு சட்டம் நியாயமானது : உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல்

tamilnadu
By Nandhini Nov 09, 2021 10:34 AM GMT
Report

10.5 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

வன்னியர் சமூகத்திற்கு அளிக்கப்பட்ட 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் அமர்வு முன்பு கடந்த 1ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எழுப்பிய 6 கேள்விகளுக்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை எனக் கூறி 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டு சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

இது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் 10.5 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

வன்னியர் சமூகத்துக்கான 10.5% உள் இடஒதுக்கீடு சட்டம், தமிழகத்தின் கடைபிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு முறையை பாதிக்கவில்லை என்றும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தரவுகளைக் கொண்டு, அரசியலமைப்பு சட்ட விதிகளின் படியே, வன்னியர் உள் இடஒதுக்கீடுக்கான சட்டமியற்றப்பட்டது என்றும் அதில் விளக்கப்பட்டிருக்கிறது. வன்னியர் சமூகத்துக்கான 10.5% உள் இடஒதுக்கீடுக்கான சட்டம் நியாயமானது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10.5% உள் இடஒதுக்கீடு சட்டம் நியாயமானது : உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் | Tamilnadu