தமிழர் நலனுக்காகத் தளராத உழைக்கும் அன்புத் தம்பி சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து - கமல்ஹாசன்

tamilnadu
By Nandhini Nov 08, 2021 09:38 AM GMT
Report

மாற்றம் வேண்டுமென ஆற்றலுடன் முன் செல்லும் அன்புத் தம்பி செந்தமிழன் சீமான் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சீமானுக்கு அரசியல் பிரபலங்கள், தொண்டர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தமிழர் நலனுக்காகத் தளராத தன்முனைப்புடன் உழைப்பவர், மாற்றம் வேண்டுமென ஆற்றலுடன் முன் செல்லும் அன்புத் தம்பி செந்தமிழன் சீமான் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.