கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் : 2-வது நாளாக தமிழக முதலமைச்சர் நேரில் ஆய்வு!
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களின் நிலவரம் குறித்து ஊழியர்களுடன் 2-வது நாளாக முதல்வர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
பருவமழை தொடங்குவதில் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக, சென்னையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், சாலைகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். இதனையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்.
அந்த வகையில் இன்றும் 2-வது நாளாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் கால்வாயை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டுள்ளார்.
மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கல்யாணபுரம் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் தமிழக முதலமைச்சர் வழங்கியுள்ளார். மேலும், கல்யாணபுரம் பகுதியிலுள்ள மருத்துவ முகாமையும் முதலமைச்சர் பார்வையிட்டுள்ளார்.