அப்துல்கலாம் பிறந்த நாள் - தலைவர்கள் வாழ்த்து

tamilnadu
By Nandhini Oct 15, 2021 04:53 AM GMT
Report

இன்று அப்துல்கலாம் பிறந்த நாளை இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி தமிழக அரசியல் தலைவர்களான கனிமொழி, கமல்ஹாசன், டிடிவி தினகரன் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கனிமொழி வாழ்த்து

இந்திய இளைஞர்களின் கனவுகளுக்கு அக்னிச் சிறகுகள் கொடுத்தவர் கலாம் என்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் கனிமொழி, இந்திய இளைஞர்களின் கனவுகளுக்கு அக்னிச் சிறகுகள் கொடுத்த, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் #அப்துல்_கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று. அவரது நினைவைப் போற்றும் வகையில், அனைவருக்கும் நம்பிக்கைத் தரக்கூடிய நல்ல எதிர்காலத்தை அமைப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

கமல் ஹாசன் வாழ்த்து

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்களின் 90 வது பிறந்த நாளான இன்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டர் பக்கத்தில், நேரிய வழியில் உழைத்துயர முடியுமென நிரூபித்தவர். இந்தத் தேசம் செல்லவேண்டிய திசையைக் காட்டியவர். பல கோடி இந்தியர்களை இலட்சியக் கனவுகளை நோக்கிச் செலுத்தியவர். ந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று. அவர் வழி நின்று அறவழி செல்வோம் என்று பதிவிட்டுள்ளார்.

டிடிவி தினகரன் வாழ்த்து

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து, சாமானியராக பிறந்து சரித்திர சாதனைகள் புரிந்த மாமேதை கலாம் என்று டிடிவி தினகரன் வாழ்த்தியுள்ளார். சாமானியராக பிறந்து சரித்திர சாதனைகள் புரிந்த மாமேதை கலாம் அவர்களின் நினைவுகளைப் போற்றி வணங்கிடுவோம்! எல்லோருக்கும் பிடித்த இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று என்று பதிவிட்டுள்ளார்.