முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைய வாழ்த்துகிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

tamilnadu
By Nandhini Oct 14, 2021 06:34 AM GMT
Report

மாண்புமிகு முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பூரண மற்றும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்மோகன் சிங் அவர்களுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது அவரது உடல்நலம் சீராக இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் தெரிவித்திருக்கிறது. இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மாண்புமிகு முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பூரண மற்றும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.