தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக ரூ.100ஐ கடந்த டீசல் விலை - வாகன ஓட்டிகள் வேதனை
தமிழக வரலாற்றில் முதல் முறையாக டீசல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியன் ஆயில் பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகிறது.
தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைந்திருக்கிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று பெட்ரோல் விலை ரூ.101.79 காசுகளுக்கு விற்பனையானது. டீசல் விலை ரூ 97.59 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று டீசல் விலையானது ரூ.100 ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் குமராட்சி, காட்டுமன்னார் கோயிலில் ரூ.100.29க்கு டீசல் விற்பனை செய்யப்படுகிறது. கடலூரில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.104.16 ஆகவும், டீசல் விலை ரூ 99.95க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம் தமிழக வரலாற்றில் முதல்முறையாக ரூ.100ஐ கடந்து டீசல் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ரூ 102.10 ஆகவும் , டீசல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து , ரூ 97.93 ஆகவும் விற்பனையாகி வருகிறது.

Rasipalan: இன்னும் 2 நாட்களில் நடக்கும் சனி பெயர்ச்சி- துரதிஷ்ட வலையில் சிக்கப்போகும் ராசிகள் Manithan
