திருச்சி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி - ஒரு ஒட்டு வித்தியாசத்தில் கடல்மணி வெற்றி!
திருச்சியில் கடல்மணி என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஊராட்சி மன்ற தலைவராகி உள்ளார். தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டமாக நடந்தது.
இதில் பதிவான வாக்குகளை எண்ணிக்கை பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. திருச்சி மாவட்டம் சிறுமருதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் கடல்மணி என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
கன்னியம்மாள் என்பவர் 423 வாக்குகள் பெற்ற நிலையில் கடல்மணி 424 வாக்குகள் பெற்று ஊராட்சி மன்ற தலைவராகி உள்ளார். ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளில் 45 இடங்களில் திமுகவும், மூன்று இடங்களில் அதிமுக பாமக 2 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக 16 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது.