ஊரக உள்ளாட்சித் தேர்தல் - கள்ளக்குறிச்சி மாவட்ட & ஒன்றிய கவுன்சிலர் பதவி ; திமுக முன்னிலை

tamilnadu
By Nandhini Oct 12, 2021 04:27 AM GMT
Report

கள்ளக்குறிச்சி மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலானது 2 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதில் முதல்கட்ட தேர்தல் அக்.6-ஆம் தேதி நடைபெற்றது.

இதனையடுத்து, 2ம் கட்ட தேர்தல் அக்.9-ம் தேதி நடந்தது. முதல் கட்டமாக அக்டோபர் 6ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 74.37% வாக்குகள் பதிவாகின. 2ம் கட்டமாக அக்டோபர் 9ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 78.47% வாக்குகள் பதிவாகி உள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடந்தது. இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் தற்பொழுது வாக்கு எண்ணிக்கை தொடங்கி எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் 19 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் 2 இடங்கள் மற்றும் 23 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் 1 இடம் பெற்று திமுக முன்னிலை வகித்து வருகிறது.

முன்னதாக, இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட 13-வது வார்டு கவுன்சிலராக புவனேஸ்வரியும், 5வது வார்டு கவுன்சிலராக கோவிந்தராஜ் என்பவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, தியாகதுருகம் ஒன்றிய கவுன்சிலராக செல்லம்மாள் மற்றும் நெடுஞ்செழியன் தேர்வு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.