வாக்கு எண்ணும் அலுவலர்கள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு

tamilnadu-election
By Nandhini Oct 12, 2021 04:14 AM GMT
Report

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என 2 கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது.

உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 7 7.43% வாக்கும், 2ம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பாதிவாகி இருந்தன. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கி இருக்கிறது.

9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் பணியானது இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் 31 ஆயிரத்து 245 அலுவலர்கள் வாக்குச்சீட்டுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டார்கள். இந்நிலையில், தாம்பரம் வாக்கு எண்ணும் மையத்தில் உணவு வழங்கப்படாததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட வாக்கு எண்ணும் அலுவலர்கள் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். 

வாக்கு எண்ணும் அலுவலர்கள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு | Tamilnadu