தமிழகத்தில் ஒரு நொடி கூட மின்வெட்டு இருக்காது – அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் ஒரு நொடி கூட மின்வெட்டு ஏற்படாது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதாக கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், தமிழகத்திற்கு தேவையான அளவு நிலக்கரி வந்து கொண்டிருக்கிறது. கையிருப்பில் இருக்கும் நிலக்கரியை மாநிலங்களின் தேவைக்கேற்ற மத்திய அரசு பிரித்து வழங்குகிறது. விவசாயத்திற்கு தேவையான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் ஒரு நொடி கூட மின்வெட்டு ஏற்படாது. அனைத்துப் பகுதிகளிலும் சீரான முறையில் மின்சாரம் கிடைக்கும் என்று உறுதியளித்தார்.