மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள், பணி ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

tamilnadu
By Nandhini Oct 09, 2021 08:11 AM GMT
Report

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி ஆணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதனையடுத்து, இந்நிகழ்ச்சியில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருக்கிறார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பணியாற்றி பணிக்காலத்தில் உயிரிழந்த நபர்களின் வாரிசுகள் 3 நபர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவியும், ஒரு நபருக்கு அலுவலக உதவியாளர் பதவிக்கான பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதேபோல மற்ற மாவட்டங்களில் உள்ள பயனாளிகளுக்கு இந்த திட்டமானது தொடர்ச்சியாக அந்த பகுதியில் உள்ள ஆட்சியர் மூலமாகவும், அமைச்சர்கள் மூலமாகவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள், பணி ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்! | Tamilnadu

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள், பணி ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்! | Tamilnadu