மெரினாவிலுள்ள நெறிக்குறவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்!
மெரினாவிலுள்ள நெறிக்குறவர்களுக்கு இன்று காலை முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்திருக்கிறார்.
தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவல் தற்போது குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று காலை மெரினா கடற்கரையில் உள்ள நூற்றுக்கணக்கான நெறிக்குறவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், மெரினாவில் நூற்றுக்கணக்கான நெறிக்குறவர்கள் படுத்துறங்குவர். இன்று காலை அவர்களுக்கு தடுப்பூசி போடத்துவங்கினோம். அப்போது நெறிக்குறவ இளைஞர் ஒருவர், எங்களுக்கு தடுப்பூசி போடுவதை இந்தி தொலைக்காட்சியில் காட்டச்சொல்லுங்கள், எங்களூரான மகாராஷ்ட்ராவில் உள்ளவர்கள் எல்லோரும் போட்டுக்கொள்ளட்டும் என பதிவிட்டுள்ளார்.
மெரினாவில் நூற்றுக்கணக்கான நெறிக்குறவர்கள் படுத்துறங்குவர்.இன்று காலை அவர்களுக்கு தடுப்பூசி போடத்துவங்கினோம்.அப்போது நெறிக்குறவ இளைஞர் ஒருவர் " எங்களுக்கு தடுப்பூசி போடுவதை இந்தி தொலைக்காட்சியில் காட்டச்சொல்லுங்கள்,எங்களூரில் ( மகாராஷ்ட்ரா)எல்லோரும் போட்டுக்கொள்ளட்டும்"என்றார். pic.twitter.com/lFU0fTkwXM
— Subramanian.Ma (@Subramanian_ma) October 9, 2021