‘இப்படி ஒரு கடத்தலா...’ மலக்குடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல் - 2 பேர் கைது!

tamilnadu
By Nandhini Oct 08, 2021 08:14 AM GMT
Report

மலக்குடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஜித் குமார், பாலமுருக குமார் ஆகிய 2 பேரும் தனி விமானம் மூலம் துபாயிலிருந்து மதுரைக்கு வந்தனர்.

அப்போது அவர்கள் இருவர் மீதும் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை சோதனையிட்டனர். அப்போது, அவர்கள் இருவரும் மலக்குடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, அவர்கள் இருவரிடமிருந்து 1.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்து, கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

‘இப்படி ஒரு கடத்தலா...’ மலக்குடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல் - 2 பேர் கைது! | Tamilnadu