நடைப்பயிற்சியின் போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்திய முதியவர்! நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை அடையாற்றில், பிரம்மஞான சபையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது ட முதல்வரை பாராட்டிய முதியவர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது உடல்நலத்தில் மிகுந்த அக்கறை உடையவர். இவர் பல பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், உடற்பயிற்சி செய்வது, நடைப்பயிற்சி மேற்கொள்வது ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அடையாறு, பிரம்மஞான சபையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவரிடம் பேசிய முதியவர், கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
அதனால் தான் அச்சமின்றி வெளியே எங்களால் வர முடிகிறது. நிர்வாகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. லஞ்சத்தை ஒழித்து, இந்திய அளவில் தமிழ்நாடு நம்பர்.1 மாநிலமாக வரவேண்டும் என்று முதலமைச்சரை வாழ்த்தியும், பாராட்டியும் அவர் கருத்தை தெரிவித்தார்.