ஊரக உள்ளாட்சித் தேர்தல் : பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு
தேர்தலின்போது மொத்தம் 39 ஆயிரத்து 408 காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பதற்றமான மற்றும் பிரச்னைக்குரிய வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அப்போது, கூடுதல் காவலர்களை நியமித்தல், சோதனைச்சாவடிகள் அமைத்தல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பை ஏற்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
தேர்தலின்போது மொத்தம் 39 ஆயிரத்து 408 காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். 1 கட்டத்தேர்தல் அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், 4ம் தேதி மாலை 5 மணிக்கு பிறகு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில், வெளியிலிருந்து அழைத்து வரப்படும் அரசியல் கட்சி பிரமுகர் வெளியேறிவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.