தமிழகத்தில் 5 நாட்கள் கனமழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு -
சேலம், தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.