முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டு முன்பு தீக்குளித்த நபரை விரைந்து காப்பாற்றிய போலீசார் - டிஜிபி பாராட்டு

tamilnadu
By Nandhini Sep 28, 2021 06:33 AM GMT
Report

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் அருகே தீக்குளித்த நபரை விரைந்து சென்று காப்பாற்றிய காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் வீட்டிற்கு முன்பு வந்த வெற்றிமாறன் என்பவர் திடீரென்று உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி பற்ற வைத்துக் கொண்டார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து அவரை மீட்டார்கள்.

இது குறித்து சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டிருக்கிறது. 40 சதவிகிதம் தீக்காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வெற்றிமாறன் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், காவல்துறையினர் விசாரணையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வெற்றிமாறன் என்பவர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் வைத்திருந்த மனுவில், உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் தன்னை, தேர்தலிலிருந்து விலகுமாறு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பெயரை கூறி சிலர் மிரட்டுவதாக குறிப்பிடப்பட்டிருந்தார் என்று காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டு முன்பு தீக்குளித்த நபரை விரைந்து காப்பாற்றிய போலீசார் - டிஜிபி பாராட்டு | Tamilnadu

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டு முன்பு தீக்குளித்த நபரை விரைந்து காப்பாற்றிய போலீசார் - டிஜிபி பாராட்டு | Tamilnadu


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12