முதல் முறையாக தமிழகத்தில் போயிங் விமானத்துக்கு பாகங்கள் தயாரித்து வழங்க ஒப்பந்தம்
தமிழகத்தில் முதன்முறையாக போயிங் விமானத்துக்கு பாகங்கள் தயாரித்து வழங்க மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற "ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு" என்ற மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், உலகின் அனைத்து பகுதிகளிலும் "மேட் இன் தமிழ்நாடு" என்ற நிலை உருவாக வேண்டும் என்று கூறினார்.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் முதல் முறையாக போயிங் விமான நிறுவனத்துக்கு முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்கும் ஒப்பந்தம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
அதாவது, போயிங் விமானத்துக்கு பாகங்கள் தயாரித்து வழங்க சேலத்தில் அமைந்திருக்கும் ஏரோஸ்பேஸ் என்ஜினீர்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுதாகி உள்ளது. இந்நிகழ்ச்சியில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் அன்பரசன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அலுவார்கள் உடனிருந்தார்கள்.