திடீரென விமான நிலையத்தில் குவிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பம் - காரணம் இதுதானாம்

2 weeks ago

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனான, உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு, முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து, அவர் அடிக்கடி தொகுதிக்கு நேரில் சென்று, குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திடீரென சென்னை விமான நிலையத்தில் திரண்டார்கள்.

இதனால், அங்கு திடீரென பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது. எதற்காக, முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்பம் திடீரென விமான நிலையத்திற்கு வந்ததற்கான என்று கேள்வி எழுந்தது.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி கால்பந்து வீரராக உருவெடுத்திருக்கிறார்.

இந்தியாவில் நடக்கும் இந்தியன் லீக் கால்பந்து தொடரினல் 21 அணிகள் விளையாடுகிறது. அதில், மணிப்பூர் மாநிலத்திற்கான நெரோகா கால்பந்து அணிக்கு விளையாடுவதற்காக தமிழ்நாடு மாநில முதல்வரின் பேரனும், உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி தேர்வாகி இருக்கிறார்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.

சென்னையிலிருந்து வெளிநாடு செல்வதற்காக இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்த இன்பநிதியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் வழியனுப்பி வைத்தார்கள். 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்