“உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை…” – மகாகவி பாரதியாருக்கு மரியாதை செலுத்திய தமிழக முதல்வர்

tamilnadu
By Nandhini Sep 11, 2021 07:05 AM GMT
Report

மறைந்த மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி பாரதியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பாரதியாரின் நினைவு நாளை ஒட்டி மெரினாவில் உள்ள சிலைக்கு மலர்தூவி முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ எனத் தன் கவிதைகளாலும் எழுத்துகளாலும் விடுதலை உணர்வைத் தட்டி எழுப்பிய பாட்டுக்கொரு புலவன், மகாகவி பாரதியாரின் நினைவுநாளில் அவரது திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்” என்று பதிவிட்டுள்ளார்.