ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்!

tamilnadu
By Nandhini Sep 01, 2021 04:39 AM GMT
Report

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் 3 முறை தமிழகத்தில் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். கடந்த 2017 ம் ஆண்டு முதல் 2021 வரை தமிழக துணை முதலமைச்சாரகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், இரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்னும் 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் இரவீந்திரநாத் குமார், 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்வானார்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (63) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயலட்சுமி உயிரிழந்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் திடீர் மரணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்! | Tamilnadu