ஓபிஎஸ் உள்ளிட்ட 63 எம்எல்ஏக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு!

tamilnadu
By Nandhini Aug 31, 2021 02:05 PM GMT
Report

விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருப்பதால் 100 ஆண்டுகள் புகழ்மிக்க அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு விழுப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த கல்லூரிகளை இணைக்க திமுக அரசு முடிவெடித்திருந்தது.

இதற்காக இன்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்ட முன்வடிவையும் தாக்கல் செய்தார். அரசின் முடிவுக்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உடனே ஓபிஎஸ் தலைமையில் வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள், சென்னை கலைவாணர் அரங்கம் அருகே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், ஒ.பி.எஸ் உட்பட் 63 எம்.எல்.ஏக்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 143 ஒன்றாக கூடுதல், 188 அரசாங்க உத்தரவை மதிக்காமல் இருத்தல், தொற்று நோய் பரவல் சட்டம் (3 of Epidemic Diseases Act) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

ஓபிஎஸ் உள்ளிட்ட 63 எம்எல்ஏக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு! | Tamilnadu