“ரூ.39 கோடி செலவில் 2.21 ஏக்கரில் மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

tamilnadu
By Nandhini Aug 24, 2021 04:48 AM GMT
Report

மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ரூ.39 கோடி செலவில் 2.21 ஏக்கரில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று பேரவையில் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

கருணாநிதி நினைவிடத்தில் அவரின் வாழ்க்கை சிந்தனை அடங்கிய நவீன ஒளிப்படங்கள் இடம்பெறும் என்று அறிவித்தார்.

இது குறித்து சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இன்று நாம் பாக்கும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது; 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டத்தை வகுத்தவர். 13 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கலைஞர்; தோல்வி அவரை தொட்டதே இல்லை, வெற்றி அவரை விட்டதே இல்லை. என் பாதை சுயமரியாதை, தமிழ் நெறி காக்கும் பாதை” என்று புகழ்ந்து பேசினார். 

“ரூ.39 கோடி செலவில் 2.21 ஏக்கரில் மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! | Tamilnadu