10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு!
பள்ளிக் கல்வித்துறை தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று இணையதளத்தில் வெளியாக உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
நாடெங்கிலும் கொரோனா தொற்று நோய் கோரதாண்டவம் ஆடியது. இதனால், மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பொதுத் தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டது.
அனைத்து மாணவர்களையும் ஆல்பாஸ் என்று அறிவித்த தமிழக அரசு கடந்த ஆண்டு மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என அறிவித்தது.
அதன் அடிப்படையில், கடந்த ஜூலை மாதம் 19ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த மதிப்பெண்களில் திருப்தியில்லாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை பள்ளிக் கல்வித்துறை வெளியிட இருக்கிறது. www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று காலை முதல் மாணவர்கள் தங்களுடைய பிறந்த தேதி மற்றும் பதிவு எண்ணை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.