சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரி திடீர் இடமாற்றம்
சுஷில் ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா, முன்னாள் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போச்கோ சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 16-ம் தேதி போலீசார் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது 3 போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில் ஒரு போக்சோ வழக்கில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு சிறையிலுள்ள சிவசங்கர் பாபா உடல்நலக்குறைவு காரணமாக 2 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல்நலக்குறைவை காரணம் காட்டி ஜாமீன்கோரிய நிலையில், அவரது ஜாமீன் மனுக்களை செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றம் தொடர்ந்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் மீதான 2-வது போக்சோ வழக்கின் குற்றப்பத்திரிகை இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். சென்னை மாநகராட்சியின் விஜிலென்ஸ் தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக குணவர்மனை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.