அதிமுக முன்னாள் எம்.பி செங்குட்டுவன் இன்று உயிரிழந்தார்!

tamilnadu
By Nandhini Aug 19, 2021 04:51 AM GMT
Report

அதிமுக முன்னாள் எம்.பி. செங்குட்டுவன் (65) உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இவரின் மறைவுக்கு கட்சியினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வேலூரை சேர்ந்த செங்குட்டுவன், கடந்த 2014ம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு வேறு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் என்ற பெருமை அப்போது இவருக்கு கிடைத்தது.

அத்துடன் இவர் 1983ம் ஆண்டிலிருந்து வழக்கறிஞராகவும் பணியாற்றி வந்தார். கடந்த 2017ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினர், தொழில்துறை நிலைக்குழு உறுப்பினர், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் குழு உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார்.

உடல் நலக் குறைவால் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக முன்னாள் எம்.பி. செங்குட்டுவன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அதிமுக முன்னாள் எம்.பி செங்குட்டுவன் இன்று உயிரிழந்தார்! | Tamilnadu