தங்கம் விலை உச்சத்தை நோக்கி உயர்ந்தது- மக்கள் அதிர்ச்சி
prices
silver
tamilnadu gold
By Nandhini
கடந்த 10ம் தேதி முதல் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. இன்று வரை ஏறுமுகத்திலேயே தங்கம் உயர்ந்து வருகிறது.
இன்றைய நிலவரத்தின் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.4,458க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.35,664க்கு விற்பனையாகிறது.
மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து 1 கிராம் வெள்ளி ரூ.68.60க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.68,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.