மாறி, மாறி இருக்கைகளை வீசி, கட்டிப்புரண்டு தாக்கிக் கொண்ட அ.தி.மு.க கவுன்சிலர்கள்!
பெரும் பரபரப்பு மாறி, மாறி இருக்கைகளை வீசி, .தி.மு.க கவுன்சிலர்கள் தாக்கிக்கொண்டு காயமடைந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் ராஜேஸ்வரி (அ.தி.மு.க) தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் 13-வது வார்டு கவுன்சிலர் மகேஸ்வரன் (அ.தி.மு.க), “பிளீச்சிங் பவுடர், முகக்கவசங்கள் வாங்கியதில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. கவுன்சிலர்களின் கோரிக்கைகளை மதிப்பது கிடையாது என்று கேட்டுக்கொண்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 16-வது வார்டு கவுன்சிலர் மனோகரன் (அ.தி.மு.க), மகேஸ்வரனோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றியது. ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டார்கள். சேர்களை தூக்கி எறிந்தனர். இதில் மகேஸ்வரன் காயமடைந்தார். பிறகு, மற்ற உறுப்பினர்கள் இருவரையும் விலக்கி விட்டார்கள்.
இதைத் தொடர்ந்து மகேஸ்வரன் சேர்மன் இருக்கையின் முன் தர்ணாவில் ஈடுபட்டார். அ.தி.மு.க உறுப்பினர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டு காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.