தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 33 பேர் பலி
தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 33 பேர் பலியாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து, அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது -
“வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,941பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,115பேர் ஆண்கள், 827பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 83ஆயிரத்து 36ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 20ஆயிரத்து 399ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 285 பரிசோதனை மையங்கள் உள்ளன.
இன்று 33 பேர் உயிரிழந்துள்ளார். 9 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 24 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,892பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 28 ஆயிரத்து 209ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.