கொரோனாவால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க நிதி ஒதுக்கீடு!
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்கள் 34 பேரின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
தமிழகத்தில் கொரோனா முதல் அலை அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் ஆம்புலன்ஸ்களிலும் மருத்துவமனை வாசல்களிலும் காத்துக் கிடக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.
அதுமட்டுமல்லாமல், தங்களது உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றுவதற்காக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவலர்கள் என பலர் உயிரிழக்க நேர்ந்தது.
அவர்களது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். தற்போது 34 மருத்துவ பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.