முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!!! வீடியோ வெளியிட்ட நடிகை மீராமிதுன்
அந்த சாதிக்கார பசங்க தான் இது மாதிரி எல்லாம் செய்வாங்க. அந்த சாதிக்காரர் இயக்குனர்கள் தான் இப்படி நடந்து கொள்கிறார்கள்.
அந்த சாதிக்கார இயக்குனர்களை திரை உலகை விட்டே நீக்க வேண்டும் என்று பேசி சர்ச்சையில் சிக்கினார் நடிகை மிரா மிதுன்.
இவரின் இந்தப் பேச்சு பல்வேறு தரப்பினர் கண்டங்களை தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீராமிதுன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு ஒன்றை அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நடிகை மீராமிதுன் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம், கலகம் செய்ய தூண்டி விடுதல், சாதி மதம் குறித்து பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் பேரில் நடிகை மீரா மீதுன் கைது செய்யப்பட உள்ளார் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நடிகை மீரா மிதுன் தற்போது மீண்டும் ஒரு வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே பேச ஆரம்பித்த நடிகை மீரா மிதுன், தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.
இதோ அந்த வீடியோ -