போகுமிடமெல்லாம் வாக்கிங்... ஹீரோக்களாக மாறிய அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், செந்தில்பாலாஜி!
எந்த இடங்களுக்கு சென்றாலும் நடைப்பயிற்சியை கைவிடாமல் கடைபிடித்து வருகிறார் மா.சுப்ரமணியன். இவருடன் அந்தந்தப் பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர்களும் இவருடன் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (61) எந்த இடத்திற்கு சென்றாலும், காலையில் உடற்பயிற்சி செய்வதன் அவசியத்தை அனைவருக்கும் உணர்த்தி வருகிறார். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் எப்போதும் மிகுந்த அக்கறையுடன் செயல்பாடுவார்.
தினமும் கடுமையான உடற்பயிற்சியும், நடைபயிற்சி மேற்கொள்வார். இவரது வீடியோக்களை பார்த்தால் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஊக்கம் அனைவருக்கும் வரும். பல கிலோமீட்டர் தூரம் ஓடி ஒட்டப்பந்தய சாதனைகள் பல படைத்துள்ளார்.
சமீபத்தில் யானைகள் அதிக அளவில் வாழ்ந்து வரும் ஓசூர் வனக்கோட்டம் அஞ்செட்டி வனப்பகுதிக்கு அருகே பெட்டமுகிலாம் மலைக் கிராமத்திற்கு நடந்தே 15 கிலோ மீட்டர் தூரம் சென்று மலைகிராம மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
2004ம் ஆண்டு காரில் மதுரைக்கு செல்லும் வழியில் பெரம்பலூர் அருகே சாலை விபத்தில் சிக்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். சாலை விபத்தில் அவருக்கு கால் மூட்டு மாற்று அறுவை செய்ய நேரிட்டது.
ஆனால், விபத்து நடந்த அதே ஊரில் 21 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டம் முடித்து அசத்தியுள்ளார். கரூர் மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொள்வதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்றிரவு வந்தார்.
கரூரில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை கரூர் வெண்ணெய்மலையில் உள்ள ரோட்டரி மைதானத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மக்களோடு மக்களாக இணைந்து நடைப்பயிற்சியில் ஈடுபட்டார்கள்.
வழக்கமாக நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு அங்கு சூப் வழங்கப்படும். இன்று வழங்கப்பட்ட நெல்லிக்காய் சூப்பை அங்கு வழக்கமாக நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுடன் சேர்ந்து அமைச்சர்கள் இருவரும் அருந்தினார்கள்.