நடிகர் பிரகாஷ்ராஜ் மருத்துவமனையில் அனுமதி! என்ன நடந்தது? ரசிகர்கள் அதிர்ச்சி

tamilnadu
By Nandhini Aug 10, 2021 02:36 PM GMT
Report

சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் பிரகாஷ்ராஜ் அறுவை சிகிச்சைக்காக ஹைதராபாத்திற்கு சென்றிருக்கிறார்

. நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று தனது வீட்டில் சறுக்கி விழுந்தார். இதில் அவர் காயம் அடைந்தார். இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் பிரகாஷ்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள், தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நண்பரும், டாக்டருமான ஹைதராபாத்தில் உள்ள குருவாரெட்டியவுடன் பிரகாஷ்ராஜ் ஆலோசனை செய்தார். அவர் அறுவை சிகிச்சை செய்வதாக சொல்லி நம்பிக்கை கொடுத்ததையடுத்து, இதை அடுத்து ஹைதராபாத்துக்கு சென்றுள்ளார் பிரகாஷ்ராஜ்.

இது குறித்து பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு சிறிய வீழ்ச்சி .. ஒரு சிறிய எலும்பு முறிவு .. ஒரு அறுவை சிகிச்சைக்காக ஹைதராபாத் செல்கிறேன். எனது நண்பர் டாக்டர் குருவாரெட்டியின் பாதுகாப்பான கைகளில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள செல்கிறேன். நான் நன்றாக இருப்பேன். கவலைப்பட ஒன்றுமில்லை என்று ரசிகர்களுக்கு ஆறுதல் சொல்லி பதிவிட்டுள்ளார்.