நாய், மாடு வளர்த்தால் வரி கட்ட வேண்டும் - மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!

tamilnadu
By Nandhini Aug 10, 2021 08:14 AM GMT
Report

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் விலங்குகளை வளர்த்தால் 10 ரூபாய் வரி கட்ட வேண்டும் என்று மதுரை மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.

இது குறித்து மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனுமதிக்கப்படாத இடங்களில் விற்பனைக்காக ஆடு, மாடுகள் வதை செய்தால் ரூ.5000 அபராதம் வசூலிக்கப்படும்.

ஆடு, மாடு, குதிரை கண்டுகொள்ளாமல் விடும் உரிமையாளர்களுக்கு ரூபாய் 1000 அபராதம் வசூலிக்கப்படும் மற்றும் சுகாதார சீர் கேடு விளைவிக்கும் வகையில் நாய்களை விட்டால் ரூபாய் 500 அபராதம், சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் திடக் கழிவுகளை பொதுவிடங்களில் போட்டும் இறைச்சி கடைகளுக்கு ரூபாய் 2000 அபராதம் வசூலிக்கப்படும்.

அத்துடன் அபராத விதிப்பு தொடர்பாக 15 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்கலாம். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சிக் கடை, பிராணி விற்பனை நிலையத்திற்கு ஆண்டு உரிமம் சதுர அடிக்கு 10 ரூபாய் வரி கட்ட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

நாய், மாடு வளர்த்தால் வரி கட்ட வேண்டும் - மாநகராட்சி அதிரடி அறிவிப்பு! | Tamilnadu