குண்டர் சட்டத்தை எதிர்த்து பப்ஜி மதன் அறிவுரைக் கழகத்தில் ஆஜர்!
கடந்த ஜூன் மாதம் ஆபாசமாக பேசி யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டு வந்த பப்ஜி மதனையும், இவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது மனைவி கிருத்திகாவையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் யூடியூபில் ஆபாசமாக பேசி பணம் சம்பாதித்து 2 சொகுசு கார்கள், பங்களாக்கள் வாங்கி குவித்தனர். இதனையடுத்து, இவர்களின் வங்கி கணக்குகளிலிருந்து ரூ. 4 கோடி பணம் முடக்கப்பட்டது. பப்ஜி மதனின் மனைவிக்கு 8 மாத கைக்குழந்தை இருப்பதால் கிருத்திகா மட்டும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மதனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், புழல் சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குண்டர் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பப்ஜி மதன், சென்னையில் உள்ள அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி வாதாடுகிறார்.