இறுதிவரை மனந்தளராது போராடிய இந்திய ஹாக்கி வீராங்கனைகளை நான் நெஞ்சாரப் பாராட்டுகிறேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!

tamilnadu
By Nandhini Aug 06, 2021 05:43 AM GMT
Report

ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் இறுதிவரை மனம் தளராது போராடியதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணியினரின் ஆட்டம் பதக்கம் பெற்ற பிறரின் முயற்சிகளுக்கு சற்றும் குறைவில்லாதது. முதல் முறையாக ஒலிம்பிக்கின் அரையிறுதி சுற்று வரை இந்தியாவை கொண்டு சென்றதற்காகவும், பிரிட்டன் அணிக்கு எதிரான போட்டியில் இறுதி வரை மனம் தளராது போராடியதற்காகவும் நமது அணியின் ஒவ்வொரு வீராங்கனையையும் நான் நெஞ்சாரப் பாராட்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.