மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி!
உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உயிரிழந்தார்.
இவரின் மறைவு அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மதுசூதனன் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனையடுத்து, மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். கடந்த மாதம் மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியறிந்து சசிகலா மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்ததோடு மருத்துவர்களிடமும் அவரது உடல்நிலை பற்றி கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.