மதுசூதனன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் - அதிமுக நிர்வாகிகள் பலர் மருத்துவமனைக்கு விரைவு!

tamilnadu
By Nandhini Aug 05, 2021 07:51 AM GMT
Report

கடந்த மாதம் 18ம் தேதி மூச்சு திணறல் காரணமாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

மருத்துவமனையில், அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல் வெளியானது. உடனே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று நலம் விசாரித்தனர். அப்போது, சசிகலாவும் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று மதுசூதனன் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

இந்நிலையில், தற்போது மதுசூதனனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, அதிமுக நிர்வாகிகள் பலர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மதுசூதனன் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கை வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

மதுசூதனன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் - அதிமுக நிர்வாகிகள் பலர் மருத்துவமனைக்கு விரைவு! | Tamilnadu