Why Blood... Same Blood... விஜய்யை தொடர்ந்து தனுஷையும் வெச்சி விளாசிய அதே நீதிபதி!
நடிகர் தனுஷ் கடந்த 2015ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து சொகுசு காரை இறக்குமதி செய்தார். அந்த சொகுசு காருக்கு 60.66 லட்சம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டிருந்தது.
நுழைவு வரி வசூலிக்க தடை கோரி தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், 50 சதவிகித வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு 2015-ம் ஆண்டு நீதிபதி உத்தரவிட்டார்.
ரூ.30.33 லட்சம் வரியை செலுத்தியதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விதிகளைப் பின்பற்றி பதிவு செய்ய 2016ம் ஆண்டு ஏப்ரலில் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகாததால் விசாரணை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த வழக்கு நடிகர் விஜய் வழக்கை விசாரித்த, அதே நீதிபதி முன்னிலையிலேயே விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் மீதான எதிர்பார்ப்பு கூடியிருந்தது. நினைத்தது போலவே தனுஷையும் மிக காட்டமாக நீதிபதி சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார். அப்போது தனுஷ் தரப்பில் வாபஸ் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது காட்டமாக பேசிய நீதிபதி, “சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்துவிட்டு, இப்போது வாபஸ் வாங்குவதாக சொன்னால் அதை எப்படி ஏற்க முடியும்? தனது வண்டிக்கு பெட்ரோல் போடும்போது ஜி.எஸ்.டி வரி கட்ட முடியவில்லை என்று ஒரு பால்காரர் நீதிமன்றத்தை நாடுவாரா? தனது வண்டிக்கு பெட்ரோல் போடும் ஒரு பால்காரர் கூட வரி செலுத்தும்போது நீங்கள் செலுத்தினால் என்ன? கோடிக் கணக்கில் நீங்கள் சம்பளம் வாங்கினாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும்போது, அதற்கான வரியை செலுத்த வேண்டியதுதானே? மனுவில் தான் ஒரு நடிகர் என ஏன் தனுஷ் குறிப்பிடவில்லை. யார் வழக்கு தொடர்ந்தாலும் தான் யார், என்ன தொழில் செய்பவர் என்பதை மனுவில் தெரிவிக்க வேண்டும்.
முதலில், தான் ஒரு நடிகர் என்பதை மறைத்தது குறித்து தனுஷ் விளக்கம் அளித்தே ஆக வேண்டும். இன்று பிற்பகல் 2:15 மணிக்குள் நுழைவு வரி பாக்கி குறித்து வணிக வரித்துறை தனுஷுக்கு தெரிவிக்க வேண்டும். இன்று பிற்பகல் 2:15 மணிக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.