“கிறிஸ்தவர்கள் செய்த ஜெபத்தால் தான் திமுக ஆட்சிக்கு வந்தது” – அமைச்சர் நாசர் பேச்சு
கிறிஸ்தவ மக்கள் செய்த ஜெபத்தினால்தான் திமுக ஆட்சிக்கு வந்திருப்பதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்திருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர் பகுதியில் அமைந்துள்ள அற்புத ஜெபகோபுரம் AG தேவாலயத்தில் 40 ஆம் ஆண்டின் ஆரம்ப விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டார்.
அப்போது விழாவில் அவர் பேசியதாவது -
கடந்த அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல கஷ்டங்கள் தரப்பட்டிருக்கிறது. அதேபோல் கடந்த 7 ஆண்டுகள் மோடி ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அதன் விளைவு விரைவில் அந்த ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். இந்த கூட்டத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவரும் இருக்கிறார்கள். இதுதான் மதநல்லிணக்க ஒற்றுமை. கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தால் தான் இன்று மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கிறிஸ்தவ மக்களின் ஜெபத்தின் வலிமையால் திமுக ஆட்சிக்கு வந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.