சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு!
கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா நடத்தி வந்தார். அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது 2 போக்சோ உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இதில் தொடர்புடையவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.