கருப்புப் பூஞ்சை நோயால் 30 பேருக்கு கண் பார்வை பறிபோனது - கோவை அரசு மருத்துவமனை அதிர்ச்சி தகவல்

tamilnadu
By Nandhini Jul 05, 2021 06:28 AM GMT
Report

கருப்புப் பூஞ்சை நோயால் 30 பேருக்கு கண் பார்வையை பறி போனதாக கோவை அரசு மருத்துவமனை அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், கோவை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சையால் இதுவரை 30 பேருக்கு கண் பார்வை பறிபோயுள்ளது. கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு, மிக தாமதமாக வந்ததால் இந்த பாதிப்பு அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தொற்று பாதித்த உடனே அவர்கள் வந்திருந்தால் பார்வை இழப்பை தவிர்த்திருக்கலாம். கருப்புப் பூஞ்சை நோயால் இதுவரை 390 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 113 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார். 

கருப்புப் பூஞ்சை நோயால் 30 பேருக்கு கண் பார்வை பறிபோனது - கோவை அரசு மருத்துவமனை அதிர்ச்சி தகவல் | Tamilnadu