இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
இதனை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.
சென்னையில் நேற்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ.98.88க்கும், 1 லிட்டர் டீசல் லிட்டர் ரூ.92.89க்கும் விற்பனையாகிறது. இந்நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.99.19க்கும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து ரூ.93.23க்கும் விற்பனையாகிறது.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் கலக்கத்தில் உள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைத் தவிர்க்க பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்...! மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை IBC Tamil
