தமிழக மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது - ஆய்வில் அதிர்ச்சி!

tamilnadu
By Nandhini Jun 08, 2021 04:48 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கையால் தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மருத்துவமனையில் குறைந்து வருகிறது. மருத்துவமனை படுக்கைகள் காலியாகி உள்ளன. இந்நிலையில், தமிழக மக்களுக்கு எதிர்ப்பு சக்தி எவ்வாறு இருக்கிறது என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சென்னையைத் தவிர தொற்று அதிகமாக இருக்கும் 765 இடங்கள் கண்டுபிடித்து, தமிழக மக்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மையங்களில் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மொத்தமாக 22,905 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதில் 23 சதவீதம் பேருக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

கொரோனா முதல் அலையின் போதும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது 31 சதவீதம் பேர் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 5 மாத இடைவெளிக்குள் 8% எதிர்ப்பு சக்தி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதாக தற்போது சுகாதாரத்துறை, அதற்கான காரணத்தையும் விளக்கி இருக்கிறது.

யுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட சோதனையின் போது கொரோனா உச்சத்தை அடைந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு சோதனை நடத்தப்பட்டதால் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தது. தற்போது இரண்டாம் அலை தொடங்கிய ஏப்ரல் மாதத்திலேயே ஆய்வு நடத்தப்பட்டதால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. 

தமிழக மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது - ஆய்வில் அதிர்ச்சி! | Tamilnadu