6 லட்சம் இந்துக்கள் TARGET - தபோதகர் மோகன் சி லாசரஸ் பேச்சால் சர்ச்சை!

tamilnadu
By Nandhini Jun 07, 2021 12:14 PM GMT
Report

திருச்செந்தூர் பகுதிகளில் சுமார் 6 லட்சம் இந்துக்களை மதமாற்றம் செய்யும் பணிகளில் ஈடுபடுமாறு மிஷனரிகளுக்கு மதபோதகர் மோகன் சி லாசரஸ் உத்தரவிட்டுள்ள வீடியோவால் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளம்பி உள்ளது.

கிறிஸ்துவ மதபோகரான மோகன் சி லாசரஸ் ஜெபக் கூட்டம் என்ற பெயரில் மக்கள் கூட்டத்தைக் கூட்டி, மதமாற்றம் பற்றியும், இந்துக்களை பற்றி அவதூறாகவும் பேசுவதை வாடிக்கையாக கொண்டு வருகிறார்.

அதன்படி, அண்மையில், திருச்செந்தூர் பகுதியில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில், இந்துக்களை மதமாற்றம் செய்ய வேண்டும் என்று மிஷனரிகளுக்கு மதாபோதகர் மோகன் சி லாசரஸ் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.