இ-பதிவு இணையம் முடக்கம் - அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

tamilnadu
By Nandhini Jun 07, 2021 07:02 AM GMT
Report

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் திடீரென இ-பதிவு இணையதளம் முடங்கிப்போனது. 

தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இ-பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால், சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் எலெக்ட்ரிசியன்கள், பிளம்பர்கள், தச்சர்கள் போன்ற சுய தொழில் புரிவோருக்கு இ-பதிவு செய்து வருகின்றனர்.

இது குறித்து, இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், இன்று ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் இ-பதிவு செய்ய முயற்சி செய்ததால் இணையதளம் முடங்கியது. இன்று மாலைக்குள் இணையதளம் சீராகிவிடும் என்றார்.