பெற்றோரிழந்த பிள்ளைகளுக்கு ரூ.5 லட்சம் முதலீடு செய்து தாயுமானவர் ஆகிறார் ஸ்டாலின் - வைரமுத்து!

tamilnadu
By Nandhini Jun 01, 2021 06:08 AM GMT
Report

கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தையின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதியாக செலுத்தப்படும் என்றும், அவர்களின் பட்டப்படிப்பு வரையில் கல்வி - விடுதிச் செலவை அரசே ஏற்கும் என்றும் பாதுகாவலர் அரவணைப்பில் இருந்தால் மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும், ஒரு குழந்தையையும் தமிழக அரசு கைவிடாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சியினர் கூட பாராட்டு தெரிவித்தனர். முக்கிய பிரபலர்களும், சினிமா நட்சத்திரங்களும், தமிழக மக்களும் சமூகவலைத்தளங்களில் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலினை வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிடுள்ளார். அந்த பதிவில்,

“கொரோனாவில்

பெற்றோரிழந்த

பிள்ளைகளுக்கு

5 லட்சம் முதலீடு செய்து

தாயுமானவர் ஆகிறார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஒரு தலைமுறையின்

தலைவன் தானென்று

விரைந்து வினைப்பட்டு

உயர்ந்து நிற்கிறார்.

குழந்தைகளின்

கண்ணீர்த்துளிகளை

முத்துக்களாக்கும்

வித்தை தெரிந்த

முத்துவேலர் பேரனை

வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.