தமிழகத்தில் வங்கிகளின் வேலை நேரம் குறைப்பு!
தமிழகத்தில் கொரோனாவின் தொற்று அதிகளவில் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. கடந்த 10ம் தேதி முதல் தமிழக முதல்வர் முழு ஊரடங்கை பிறப்பித்தார்.
இந்த ஊரடங்கு வரும் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வங்கிகளின் வேலை நேரத்தையும், ஜூன் 6 வரை குறைத்து தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.
இது குறித்து, அந்த குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வங்கி கிளைகளுக்கு காலை, 10:00 முதல், மாலை, 4:00 மணி வரை வேலை நேரமாகும். ஏற்கெனவே அறிவித்தது போல, பிற்பகல், 2:௦௦ மணி வரை பரிவர்த்தனைகள் நடைபெறும்.
மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள், வழக்கம் போல மாலை, 5:00 மணி வரை செயல்படும். கிளைகளில், மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள், மாற்று முறையில் பணிபுரிவர்.
ரொக்க பரிவர்த்தணை, என்.இ.எப்.டி., - ஆர்.டி.ஜி.எஸ்., வாயிலாக பணம் அனுப்புதல், அரசு வர்த்தகம், காசோலை பரிவர்த்தனை சேவைகளை வழங்க வேண்டும்.
ஏ.டி.எம்., ரொக்கப் பணம் செலுத்தும் இயந்திரம் போன்றவை செயல்படுவதை, வங்கிக் கிளைகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.