3000 முன்களப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் கமாண்டோ படை - குவியும் பாராட்டு

tamilnadu
By Nandhini May 30, 2021 09:23 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் கொரேனா பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டிச் சென்றுக் கொண்டிருக்கிறது.

சென்னையை அடுத்து, தற்போது கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இயல்பு நிலையை மீட்டெடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஊரடங்கு காரணமாக பரிதவித்து வரும் மக்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் உதவி செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழக காவல்துறை சார்பில், தமிழ்நாடு கமாண்டோ படையினர் தினமும் 5 அரசு மருத்துவமனைகளில் தினமும் 3,000 முன்கள பணியாளர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள். பத்திரிகையாளர் சபீர் அகமது தமிழ்நாடு கமாண்டோ படையினரின் சேவையை பாராட்டி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.