திருப்பூரில் 100 ஆக்சிஜன் படுக்கை மையம், கார் ஆம்புலன்ஸ் சேவை - முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்!

tamilnadu
By Nandhini May 30, 2021 08:48 AM GMT
Report

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தன்னார்வலர்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள 100 ஆக்சிஜன் படுக்கை மையத்தையும் கார் ஆம்புலன்ஸ் சேவையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருப்பூர் ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு மற்றும் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 100 ஆக்சிஜன் படுக்கை உடனான கோவிட் கேர் மையத்தை திறந்து வைத்தார்.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையை போக்கும் விதமாக 20 கார் ஆம்புலன்ஸ் சேவையை தமிழக முதலமைச்சர் மு‌.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். மேலும் 6 மருத்துவர்களுக்கு தற்காலிக பணி ஆணையையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா‌.சுப்பிரமணியம், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழக வேளாண்மை துறை செயலாளரும், திருப்பூர் மாவட்ட கோவிட் சிறப்பு கண்காணிப்பாளர் சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

திருப்பூரில் 100 ஆக்சிஜன் படுக்கை மையம், கார் ஆம்புலன்ஸ் சேவை - முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்! | Tamilnadu